Wednesday, August 13, 2008

செய்திகள் ஆக்ஸ் 13 மணி 7.30 AM

இந்தியாவில் 800 தீவிரவாத முகாம்கள்: எம்.கே.நாராயணன் அதிர்ச்சி தகவல் ! -- ஏ.சுகுமாரன்
. சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தியாவில் 800-க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்கள் மறைமுகமாக செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன். வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை கொண்டு செல்லும்போதும், மருத்துவமனையிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்துவது பெரும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது என்றார்

2013-ம் ஆண்டில் வடதுருவத்தில் ஐúஸ இருக்காது ---ஐஸ் வேகமாக உருகுகிறது: விஞ்ஞானிகள் பெரும் கவலை ! -- ஏ.சுகுமாரன்
புவி வெப்பமடைவதால் வட துருவத்தில் ஐஸ் பாறைகள் வேகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் 2013-ம் ஆண்டில் ஆர்க்டிக் பகுதியில் ஐúஸ இருக்காது என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். . செயற்கைக்கோள் படம் மற்றும் கம்ப்யூட்டரில் திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பனிப் பாறைகள் உருகிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2007-ம் ஆண்டு ஆர்க்டிக் பகுதியில் இருந்த நிலையுடன் தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பல லட்சம் சதுர கிலோமீட்டர் வரையிலான ஐஸ் பாறைகள் உருகியுள்ளது தெரியவந்துள்ளது என்று பேராசிரியர் வியஸ்லா மஸ்லோவ்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் கடற்படை சூப்பர் கம்ப்யூட்டர் அளித்துள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக லண்டனில் வெளியாகும் "அப்சர்வர்' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 2013-ம் ஆண்டு கோடைக்காலத்தில் ஆர்க்டிக் பகுதியில் ஐúஸ இருக்காது என்று விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.
இதனால் கடல் நீர் மட்டம் உயர்த்து பூமியின் பல பகுதி அழிய கூடும் .புவி வெப்பம் விரைவில் மிக பெரிய பிரச்சனை ஆக விளங்க போகிறது

தங்க மனிதர் அபிநவ்-க்கு .ரங்கசாமி வாழ்த்து ! ஒலிம்பிக் வெற்றிக்கு பாராட்டு ! -- ஏ.சுகுமாரன்
பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்துள்ள இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் அபிநவ் பிந்த்ராவுக்கு என் உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் மொத்தம் 700.5 புள்ளிகளைச் சேர்த்து முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை. இந்தியத் திருநாட்டுக்காக பெருமை தேடிந்தந்து வரலாறு படைத்துள்ள வீரர் அபிநவ் பிந்ராவுக்கு என் சார்பிலும், புதுச்சேரி அரசு சார்பிலும், மாநில மக்கள் சார்பிலும் உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி . அவரது வாழ்த்துச் செய்தியில்

சுதந்திர தின விழா - வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு --1 லட்சம் போலீசார் தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் -- ஏ.சுகுமாரன்

தீவிரவாதிகளின் மிரட்டலையொட்டி இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சுதந்திரதின விழாக்களுக்கு வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோட்டையில் 15 சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் இரவு-பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரதினத்தன்று சென்னையிலும், நெல்லையிலும் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தலைமறைவாக உள்ள 11 தீவிரவாதிகளை தமிழகம் முழுவதும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களுடைய புகைப்படத்துடன்கூடிய துண்டு பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களை பற்றி துப்பு கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சுதந்திரதினத்தன்று தீவிரவாதிகள் ரெயில்களில் குண்டு வைத்து தாக்கக்கூடும் என்று ஒரு எச்சரிக்கை செய்தி மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் ரெயில்களுக்கும், ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில்களில் பார்சல் அனுப்புவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.சுதந்திரதின விழாக்கள் முடியும் வரை தமிழகம் முழுவதும் உஷாராக இருக்கும்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் டி.ஜி.பி. கே.பி.ஜெயின் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளார்.தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் சுதந்திரதின விழாக்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாங்கள் அனுமதித்தால் தான் ஒகேனக்கல் குடி நீர் திட்டம் ! கர்நாடக முதல்-மந்திரி பேட்டி -- ஏ.சுகுமாரன்
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 401/2 லட்சம் மக்கள் பயன் அடையும் வகையில் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ``1,334 கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டபடி அதன் கால அட்டவணைப்படி நிறைவேற்றும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கோ, கர்நாடக அரசுக்கோ தமிழக அரசு கடிதம் எதுவும் எழுத வேண்டிய அவசியம் இல்லை'' என்று சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி இருந்தார். ஆனால் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கர்நாடக அரசு ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நேற்றும் அந்த மாநில முதல்-மந்திரி எடிïரப்பா ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.அவர் நேற்று டெல்லி வந்தார். அப்போது எடிïரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் இது பற்றி "``ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, சர்ச்சைக்குரிய நிலப்பகுதியில் தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு இணைந்து நிபுணர்களைக் கொண்டு கூட்டு சர்வே நடத்த வேண்டியது மிக, மிக அவசியம். எங்கள் அனுமதி இல்லாமல் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு தொடங்க முடியாது என்று ஏற்கனவே நான் தமிழக முதல்-மந்திரியிடம் தெரிவித்து இருக்கிறேன்." என்றார்


.

No comments: