Tuesday, August 05, 2008

செய்திகள் புதுசு ! ஆக் 5 மணி 7.30 AM

சேது சமுத்திர பந்த் விவகாரம் தீவிரம் ! கருணாநிதி, டி.ஆர். பாலுவுக்கு வாரண்ட்-- உச்ச நீதிமன்றம் கண்டனம் ஏ.சுகுமாரன்
சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரித்து கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தமிழகத்தில் பந்த் நடந்தது. தமிழக அரசே இந்த பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது . சில இடங்களில் பந்த் நடந்தது ஆனால் அரசு பந்த் நடத்தவில்லை என்றது .
தடையை மீறி பந்த் நடத்தியதற்காக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்தார். இதுபற்றி விளக்கம் கேட்டு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை. நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் இவ்வழக்கை திங்கள்கிழமை விசாரித்தனர். "விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை. இதற்காக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பிப்போம்' என்று எச்சரித்தனர்.
எனினும் நோட்டீசுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கும், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும் மேலும் 4 வாரம் அவகாசம் அளித்தனர். நோட்டீசுக்கு இதுவரை பதில் அளிக்காதது ஏன்? என்று அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச.அகத்தியலிங்கம் பாண்டிச்சேரி அருகே கார் விபத்தில் மரணம்---ஏ.சுகுமாரன்
அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையின் மேலாண் இயக்குநரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்மேலாண் இயக்குநரும் தமிழ் அரிமா என அனைவராலும் போற்றப்பட்ட முனைவர் ச.அகத்தியலிங்கம் ஐயா அவர்கள் பாண்டிச்சேரி அருகே கார் விபத்தில் இன்று(04.08.2008) மரணம் அடைந்தார்சிதம்பரம், மாரியப்பன் நகரைச் சேர்ந்த அகத்தியலிங்கம், அவரது மனைவி பொன்னம்மாள் (78), பேத்தி லதா (18) ஆகியோர் சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு காரில் சென்றனர். தீபபாலன் (38) காரை ஓட்டிச் சென்றார்.
கார் கிளியனூர் காமராஜர் காலனி அருகே செல்லும்போது எதிரே புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த லாரியுடன்மோதியது.
இதில் அகத்தியலிங்கம் அதே இடத்தில் இறந்தார். பொன்னம்மாள், லதா, டிரைவர் தீபபாலன் ஆகியோர் காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் பொன்னம்மாள், தீபபாலன் ஆகியோர் இறந்தனர். லதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கிளியனூர் போலீஸôர் விசாரித்து வருகின்றன
முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள்: ஆளுநர், சோனியா வாழ்த்து ! தொண்டர்கள் திரண்டனர் ! புதுவை விழா கோலம் !ஏ.சுகுமாரன்
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தனது 59-வது பிறந்தநாளை . தொண்டர்கள் கொண்டு வந்த 59 கிலோ கேக்கை ரங்கசாமி வெட்டி, கேக் துண்டுகளை தொண்டர்களுக்கு வழங்கினார். மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு முதல்வர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்பிறந்தநாளையொட்டி தன் தாயார் பாஞ்சாலி அம்மாளிடம் முதல்வர் ஆசி பெற்றார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்கள் அம்பிகாசோனி, வயலார் ரவி, காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் அருண்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் வாழ்த்தினர்
திமுக அமைப்பாளர் ஆர்.வி. ஜானகிராமன், பாமக எம்.பி. பேராசிரியர் மு.ராமதாஸ் ஆகியோர் தலைமையில் அக் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் க.லட்சுமிநாராயணன், என்.ஆனந்து மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொன்டர்கள், வாழ்த்து தெரிவித்தனர் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கதிர்காமம் கோயிலில் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முதல்வருக்கு சால்வைகளும், பூங்கொத்துகளும், பழங்களும் குவிந்தன. சிலர் கோயில்களில் இருந்து பிரசாதங்களைக் கொண்டு வந்தனர். உழவர்கரை நகராட்சித் தலைவர் என்.எஸ்.ஜெ.ஜெயபால் தலைமையில் மணக்குளவிநாயகர் கோயிலில் தொண்டர்கள் தங்கத் தேர் இழுத்தனர்.
புதுவை அரசை கண்டித்து அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் ! ஜெயலலிதா அறிவிப்பு --ஏ.சுகுமாரன்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரியில் அ.தி.மு.க. சார்பில் நாளை (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்து உள்ளார்
தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து ஏழை, எளிய மாணவர்களுக்காக பெறப்படும் 50 விழுக்காடு இடங்களை பெறாமல், ஆண்டுதோறும் ஏழை, எளிய மாணவ-மாணவியருக்கு துரோகம் இழைக்கும் காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து 50 விழுக்காடு இடங்களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர புதுச்சேரி சட்டமன்றப் பேரவையில் உடனடியாக சட்டம் இயற்ற வலியுறுத்தியும், அரசு சார்பில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரியை தாமதமின்றி உடனடியாக திறக்க வலியுறுத்தியும், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சார்பில் நாளை (புதன் கிழமை) காலை 10 மணி அளவில் புதுச்சேரி சட்டமன்றப் பேரவைக்கு அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டி.ஜெயக்குமார், எம்.எல்.ஏ., தலைமையிலும், புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் ஏ.அன்பழகன், எம்.எல்.ஏ. முன்னிலையிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.
எம்.பி.க்களுக்கு லஞ்ச விவகாரம்: ! பா.ஜனதா திட்டமிட்ட சதி ! ஐக்கிய முற்போக்கு கூட்டணி சி.டி. வெளியீடு --ஏ.சுகுமாரன்

பாராளுமன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மையை மத்திய அரசு கடந்த மாதம் நிரூபித்தது. அப்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. பாராளுமன்றத்துக்குள்ளேயே கோடி கோடியாக பணத்தைக் கொண்டு வந்து பா.ஜனதா எம்.பி.க்கள் காண்பித்தனர்.மத்திய அரசுக்கு ஆதரவாக நடந்துகொள்வதற்காக சோனியாவின் செயலாளரும், சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங்கின் செயலாளரும் அந்த பணத்தைக் கொடுத்ததாக அவர்கள் கூறினர்.இந்த சூழ்நிலையில் பா.ஜனதாவுக்கு போட்டியாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பாக நேற்று ஒரு சி.டி. வெளியிடப்பட்டது. அதில், `சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங்கை சிக்க வைப்பதற்காக பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி, எம்.பி. பாகன் சிங் குலாஸ்தே ஆகிய இருவரும் அமர்சிங் உதவியாளர் சஞ்சீவ் சக்ஸேனா உடன் சேர்ந்து திட்டமிடுவது' போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன சி.டி.யை காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் லாலு பிரசாத், முலாயம் சிங், அமர்சிங், ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.
மூத்த குடிமக்களுக்கென தனியே வேலைவாய்ப்பு வெப்சைட் ! வாலிபர்கள் கலக்கம் ! --ஏ.சுகுமாரன்
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் வேறு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க விரும்புவோருக்கென வெப்சைட் தொடங்கப்பட்டு உள்ளது. டிக்னிடி பவுண்டேஷனும், ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் நிறுவனமும் இணைந்து இதைத் தொடங்கியுள்ளன.
http://www.dignitysecondcareers.org/ என்ற அந்த வெப்சைட்டில் மூத்த குடிமக்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து வேலை தேடலாம். ஓய்வு பெற்ற பிறகும் வேலை செய்ய விரும்புவோருக்கு ஏற்ற வாய்ப்புகளைத் தேடும் தளமாக இந்த வெப்சைட் இருக்கும் என அதைத் தொடங்கி வைத்த ஐசிஐசிஐ ப்ரூடெண்சியல் நிறுவன நிர்வாக இயக்குனர் ஷிகா சர்மா தெரிவித்தார்.

No comments: