Thursday, August 14, 2008

செய்திகள் ஆக்ஸ் 14 மணி 7.45

நான்கு மாததிற்கு பின், ஜெயலலிதா கட்சி அலுவலகத்துக்கு வந்தார் ! இடதுசாரிகள், பாமக.வுடன் கூட்டு ? அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம்--ஜெயலலிதா---- ஏ.சுகுமாரன்
தனது நீண்ட கொடநாடு பயணத்தை முடித்த பின்னர் நான்கு மாத இடைவெளிக்குப் பின், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தார் ஜெயலலிதா. அங்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது பாமக - இடதுசாரிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஒருவர் இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபட முடியும். நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கவில்லை. அரசியலைக் கூர்ந்து கவனித்து அறிக்கை வெளியிட்டேன். நான் எங்கும் போகவில்லை. தமிழகத்தில்தான் இருந்தேன். மக்கள் பிரச்னைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவும் கட்சியினருக்கு உத்தரவிட்டேன். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து எனது அரசியல் எதிரிகளை மண்ணைக் கவ்வச் செய்தேன். எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும்... இந்திய அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, பாமக மற்றும் இடதுசாரிகளுடனான கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். பொறுத்திருந்து பாருங்கள். போக போகத் தெரியும்.
தேசிய நலன் சார்ந்த பிரச்னைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். அது பாமகவோ, இடதுசாரிகளாகவோ இருக்கலாம். காங்கிரஸýம், இடதுசாரிகளும் இணைந்து செயல்பட முடியும் என்கிறபோது அரசியலில் எதுவும் சாத்தியமே. அதனால் அதிமுகவும் இடதுசாரிகளும் இணைந்து செயல்பட முடியும்.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, தமிழக அரசு உண்ணாவிரதம் நடத்தியது தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் மேலும் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
அரசியலில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம். இது ஜனநாயகத்தின் சிறப்பு. எனவே, மாயாவதி பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதில் தவறில்லை.
ஆந்திரத்தில் தமிழக "வியாதி' பரவியுள்ளது என்று நடிகர் சிரஞ்சீவி கட்சி தொடங்குவது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
தமிழகத்தில் நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்றவர்கள் கட்சி தொடங்கி நடத்தி வருகின்றனர். இளைஞர்களை தங்களது கட்சிகளுக்குள் இழுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திரத்தில் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் சிரஞ்சீவி, புதிய கட்சி தொடங்க உள்ளார். இதுகுறித்து, கருத்துத் தெரிவித்த ஜெயலலிதா, ""தமிழகத்தில் ஏற்பட்ட வியாதி. தற்போது ஆந்திரத்துக்கும் பரவியுள்ளது'' என்றார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் 18-ம் தேதி --புதுச்சேரி அரசியல் தலையெழுத்து முடிவகுமா ? -- ஏ.சுகுமாரன் .

டெல்லியில் சோனியாகாந்தியைச் சந்தித்த 5 புதுச்சேரிஅமைச்சர்களும் முதல்வருக்கு எதிராகப் புகார் கூறியுள்ளனர். மேலும் தங்கள் பக்கம்தான் அதிகமான எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் முதல்வர் ரங்கசாமியை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர். பின் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்களிடம் தன்னுடைய தரப்பு நியாயங்களை முதல்வர் ரங்கசாமி ஏற்கெனவே எடுத்துக் கூறியிருந்தார்.
இப்பொது காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டி பலத்தை நிரூபிக்குமாறு கட்சி மேலிடம் கட்டளை பிறப்பித்துள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம் இக் கூட்டத்தைக் கூட்டுமாறு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இக் கூட்டம் 18-ம் தேதி மாலை 3 மணிக்கு காலாப்பட்டு பகுதியில் உள்ள ஹோட்டல் அசோக்கில் நடக்கிறது.
புதுவையில் சுதந்திர தினவிழா: 2 ஆயிரம் போலீஸ பாதுகாப்பு பணி --- பாதுகாப்பு தீவிரம் -- ஏ.சுகுமாரன்
நாடு முழுவதும் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் தீவிரவாதிகள் மிரட்டல் இருக்கிறது. . பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸôர் ஈடுபட்டுள்ளனர். இதற்கான போலீஸ் அணிவகுப்பு, சுதந்திர தினவிழா நடைபெறும் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை நடந்தது. இதைத் தவிர வாகன சோதனை, பஸ் நிலையம், ரயில் நிலையம், லாட்ஜ்களில் சோதனை நடந்து வருகின்றன.
புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றுகிறார். வீரதீர செயல் புரிந்தோருக்கு அவர் விருதுகள் வழங்குகிறார். பின்னர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

தனி மனித சாதனை ! ஒலிம்பிக்கில் 11 தங்கப்பதக்கம் வென்றார் ! அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் புதிய வரலாறு படைத்தார்,! -- ஏ.சுகுமாரன்

அமெரிக்க நீச்சல் வீரர் 23 வயதான மைக்கேல் பெல்ப்ஸ் பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறார். 400 மீட்டர் தனிநபர் மெட்லே, 4ஜ்100 மீட்டர் பிரிஸ்டைல், 200 மீட்டர் பிரிஸ்டைல் ஆகிய 3 பிரிவிலும் உலக சாதனையோடு தங்கப்பதக்கம் வென்ற பெல்ப்ஸ், நேற்று மேலும் 2 தங்கப்பதக்கத்துக்கு சொந்தக்காரரானார்.நேற்று நடந்த 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் அவர் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 52.03 வினாடிகளில் எட்டி தங்கப்பதக்கம் வென்றார். இது புதிய உலக சாதனையாகும்.இதே போல் 4ஜ்200 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சல் போட்டியில் பெல்ப்ஸ், ரியான் லோச், ரிக்கி பெர்னஸ், பீட்டர் வான்டர்காய் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி 6 நிமிடம் 58.56 வினாடிகளில் இலக்கை அடைந்து புதிய சகாப்தம்
பீஜிங் ஒலிம்பிக்கில் 5 உலக சாதனையுடன் 5 தங்கப்பதக்கத்தை அள்ளிய பெல்ப்ஸ், ஒலிம்பிக் போட்டியில் ஒட்டு மொத்தமாக இதுவரை 11 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறார். முன்னதாக கடந்த ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அவர் 6 தங்கம் வென்றிருந்தார்.
இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக தங்கப்பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய சகாப்தத்தை படைத்தார்.
சுதந்திர தின விழா : கோவில்களில் சமபந்தி விருந்து--அமைச்சர்கள்கலந்து கொள்கின்றனர் -- ஏ.சுகுமாரன்
61-வது சுதந்திர தின விழா நாளை (15-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. அன்று சென்னையில் 33 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து கொள்கிறார். ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோயில், நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடக்கும் சமபந்தி விருந்தில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் அமைச்சர் பெரியகருப்பன், திருவேட்டீஸ்வரர் கோவிலில் அமைச்சர் தங்கம் தென்னரசு, கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன், பெசன்ட்நகர் மகாலட்சுமி கோவிலில் அமைச்சர் தமிழரசி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.இந்தத் தகவலை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் டெல்லி மேல்-சபை எம்.பி.யாக நியமனம் -- ஏ.சுகுமாரன்
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன். பிரதமர் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக்கு பாத்திரமான இவர், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவராக இருந்து வந்தார். .ரங்கராஜன், ஒரு சிறந்த பொருளாதார மேதை ஆவார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், ஆந்திர மாநிலத்தின் கவர்னராகவும், 12-வது நிதி கமிஷனின் தலைவராகவும் பதவி வகித்து உள்ளார்.இதுதவிர பத்மவிபூஷண் விருதையும், இவர் பெற்று உள்ளார். கடந்த வாரம் இவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இப்பொது 76 வயதாகும் சி.ரங்கராஜன் டெல்லி மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டேவின் மறைவினால் ஏற்பட்ட காலி இடத்துக்கு ரங்கராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் டெல்லி மேல்-சபையில் சுயேச்சை உறுப்பினராக செயல்படுவார்.

No comments: