Monday, August 04, 2008

செய்திகள் ஆக் 4 7.35AM

இமயமலை நயனதேவி கோயில் விழாவில் கொடுமை ! 145 பக்தர்கள் நெரிசலில் பலி - ஏ.சுகுமாரன்

இமாசலப் பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மலைப்பகுதியில் நயனதேவி கோயில் உள்ளது இக் கோயிலில் தற்போது "நவராத்ரா' விழா நடந்து வருகிறது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிந்தனர்.
பலத்த மழையின் காரணமாக அருகில் உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் கற்கள் உருண்டு வருவதாக கூட்டத்தினரிடையே பரவிய வதந்தியால் பயங்கர நெரிசல் ஏற்பட்டுள்ளது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 குழந்தைகள் உள்பட 145-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில ஆளுநர் பிரபா ராவ், முதல்வர் துமால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுவை அரசுக்கு திமுக ஆதரவு - நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் திமுக ஆதரிக்கும் !-- நாஜிம்--ஏ.சுகுமாரன்

புதுவையில் கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கையை முதல்வர் என். ரங்கசாமி இழந்துவிட்டார் எனவும், சட்டப்பேரவையை கூட்டி உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மாநில அதிமுக செயலாளர் ஆ. அன்பழகன் சனிக்கிழமை கோரியிருந்தார். இதுகுறித்து நாஜிமிடம் கேட்டபோது, அதிமுக கோரியிருப்பதை ஏற்று சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அரசுக்கு திமுக உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள். ஆனால், தற்போதுள்ள சூழலில் அதிமுக கோருவதுபோல் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய அவசியம் இல்லை என நாஜிம்தெரிவித்தார்.
சுனாமி வீடுகள் பணியை தொடங்காவிட்டால் ஆகஸ்ட் 16-ம் தேதி கறுப்புக் கொடி போராட்டம் -சிங்காரவேலர் இளைஞர் நற்பணி மன்றம் --ஏ.சுகுமாரன்
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணியை 15 நாள்களில் தொடங்காவிட்டால் ஆகஸ்ட் 16-ம் தேதி கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்த உள்ளதாக சிங்காரவேலர் இளைஞர் நற்பணி மன்றம் கூறியுள்ளது. மன்றத்தின் தலைவர் ஏ.குமார் என்கிற மோகனசுந்தரம், செயலர் ஆர்.செல்வராஜ், பொருளாளர் எஸ்.மகேந்திரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: சுனாமியால் அதிக உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்ட கணபதிச் செட்டிக்குளம், பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி ஆகிய 4 கிராமங்களின் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. சட்டக் கல்லூரி அருகே வீடு கட்டிக் கொடுக்க 27.8.2007-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 3 மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை.
ஒரு சில மாதங்களில் மழைக் காலம் தொடங்க உள்ளதால் சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடுகளிலும், குடில் அமைத்து வாழ்பவர்களும் பயத்துடன் வாழுகின்றனர். வீடு கட்டும் பணியைத் தற்போது தொடங்கினாலும் முடிக்க ஓராண்டாகும். என்று கூறியுள்ளனர்
ரங்கசாமி பிறந்த நாள் விழாபொற்கால ஓவியப் போட்டி--ஏ.சுகுமாரன்
-

புதுச்சேரி மாநில மக்கள் நல்வாழ்வு பேரவை மற்றும் புதுச்சேரி ஓவியர் மன்றம் சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சுப்பையா சாலையில் உள்ள தூய இதய ஆண்டவர் பெண்கள்உயர்நிலைப்பள்ளியில் ஓவியப்போட்டி நடந்தது.தொடக்க விழாவில் அந்தோணிசாமி அடிகளார் போட்டியை தொடங்கி வைத்தார். உழவர்கரை நகராட்சி தலைவர் என்.எஸ்.ஜே. ஜெயபால், புதுச்சேரி மாநில மக்கள் பேரவை தலைவர் சக்திவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பள்ளிகளைசேர்ந்த 210 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பொற்கால புதுச்சேரி என்ற தலைப்பில் ஓவியங்களை வரைந்தனர்.

No comments: