Thursday, August 21, 2008

செய்திகள் ஆக்ஸ் 21 மணி 8.00AM

சபாஷ் இந்தயா ! ஒலிம்பிக்கில் 2-வது பதக்கம்: !-----ஏ.சுகுமாரன்


1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த போட்டியில் மல்யுத்தத்தில் கஷபா ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார் டெல்லியைச் சேர்ந்த மல்யுத்த விளையாட்டு வீரர் சுஷில் குமார். முன்னதாக, துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபிநவ் பிந்த்ரா 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது நினைவிருக்கலாம். இதற்கு முன்பு 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த போட்டியில் மல்யுத்தத்தில் கஷபா ஜாதவ் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். அதன்பிறகு இப் பிரிவில் இந்தியா கைப்பற்றும் பதக்கம் ஒரே ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டிகள் இரண்டில் இந்தியா பதக்கம் சேர்ப்பது இதுவே முதல்முறை. வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த சுஷில் குமாருக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதி, ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சுஷில் குமாருக்கு பரிசுகள் குவிந்தவண்ணம் உள்ளது
ராஜீவ் 64 வது பிறந்த நாள்: வீர பூமியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி!-----ஏ.சுகுமாரன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 64-வது பிறந்த நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர பூமியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவரது இரு குழந்தைகளும் புதன்கிழமை காலை முதலில் வந்து அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் பக்தி இசைப் பாடல்களும் இசைக்கப்பட்டன. மேலும் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
ஒகேனக்கல் விவகாரம்: மிரட்டுகிறது கர்நாடகம் !-----ஏ.சுகுமாரன்
முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸின் 93-வது பிறந்த நாள் விழாவில் புதன்கிழமை கலந்துகொண்ட பின்னர் பெங்களூரில் நிருபர்களிடம் பசவராஜ் பொம்மைபேசும்போது ஒகேனக்கல் விவகாரத்தில் சுமுகத் தீர்வு ஏற்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்று தெரிவித்தார்.
: மேலும் ஒகேனக்கல் பகுதி கர்நாடகத்துக்குச் சொந்தமானது. எனவே அங்கு இரு மாநிலமும் கூட்டு சர்வே நடத்த வேண்டும். அப் பகுதியில் தமிழக அரசு செயல்படுத்த உள்ள குடிநீர்த் திட்டத்தை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேச வேண்டும். இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் ஆவன செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைபுதீன் சோஸýக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடுமாறு அதில் கோரியுள்ளேன். இந்த விவகாரத்தில் இன்னும் 10 நாள்களில் மத்திய அரசு தனது முடிவை எடுக்காவிட்டால் அனைத்துக் கட்சியினருடன் டெல்லி செல்வோம். இப் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு முன்வராவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம். காவிரி நதிநீரைப் பங்கீட்டுக்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு நிலுவையில் உள்ளதால், காவிரியில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட எந்தப் புதிய திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்த முடியாது என்றார்..
பொது வேலைநிறுத்ததால் தமிழகம் , புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லை ! !-----ஏ.சுகுமாரன்
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையில் உள்ள பாதகமான அம்சங்களை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் புதன்கிழமை பொதுவேலைநிறுத்தம் நடத்த அறிவிப்பு வெளியிட்டிருந்தன. இதையொட்டி புதுச்சேரியிலும் பொதுவேலைநிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் ஏற்பாடுகள் செய்து வந்தன. இருப்பினும் இப்போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.புதுச்சேரி கொக்கு பார்க் அருகில் இக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் விசுவநாதன் உள்பட 77 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகே நடந்த மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் செயலர் சோ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் 102 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய சிறையை முதல்வர் என்.ரங்கசாமி திறந்து வைத்தார் ! புதிய சிறை மனிதநேயத்துடன் சீர்திருத்தப் பள்ளியாக விளங்கும் --முதல்வர் விருப்பம் !-----ஏ.சுகுமாரன்

காலாப்பட்டில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சிறையை புதன்கிழமை திறந்து வைத்து பேசியபோது புதிய சிறையை மேம்படுத்த மேலும் ரூ.15 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி கூறினார்.
மேலும் இந்தப் புதிய சிறை மனிதநேயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய சிறையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இது வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதை சிறை என்பதைக் காட்டிலும் சீர்திருத்தப் பள்ளியாக கைதிகள் நினைக்க வேண்டும். நல்ல கல்வியைக் கொடுக்கும் சூழ்நிலையை இந்தச் சிறை உண்டாக்க வேண்டும். பல பட்டதாரிகள் இங்கிருந்து வெளியேற வேண்டும். நல்ல தரமான நூலகம் அமைக்கவும் ஆவன செய்ய உள்ளோம். புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. பொருளாதார வளர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு இருந்தாலே குற்றங்கள் குறையும். இச் சிறையில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்த ரூ.15 கோடி செலவில் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் ரங்கசாமி.
மு.ராமதாஸ் எம்.பி., , சிறைத்துறைத் தலைவர் வாசுதேவராவ், காவல்துறைத் தலைவர் கான், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சந்திரபால் சிங் மற்றும் பலர் பங்கேற்றனர்.
புதுவையில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா: தலைவர்கள் அஞ்சலி!-----ஏ.சுகுமாரன்

முருகா அருகில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி மாலை அணிவித்தார்புதுச்சேரி அரசு மற்றும் செய்தி விளம்பரத்துறை சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கந்தசாமி, சபாநாயகர் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன்பேராசிரியர் ராமதாஸ் எம்.பி., தலைமை செயலாளர் நைனீ. ஜெயசீலன், , பொது செயலாளர் காந்திராஜ், அங்காளன் எம்.எல்.ஏ., உழவர்கரை நகராட்சி தலைவர் ஜெயபால், சேவாதள தலைவர் தாமோதரன், மகளிர் அணி தலைவி ழான்.பூரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.பிறகு மகளிர் காங்கிரஸ் சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மகளிர் காங்கிரஸ் தலைவர் ழான்.பூரணி தலைமை தாங்கினார். பேரணியில் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கந்தசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், மகளிர் ஆணைய தலைவி கமலினி, மேரிதெரசா, மார்க்ரேட், மணிமேகலை, கவுன்சிலர் பிரேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.பேரணி ராஜீவ்காந்தி சிலையில் இருந்து புறப்பட்டு காமராஜர் சாலை, நேருவீதி, மிஷன்வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, வெங்கடசுப்பாரெட்டியார் சிலை, இந்திராகாந்தி சிலை வழியாக மீண்டும் ராஜீவ்காந்தி சிலை அருகே சென்று முடிவடைந்தது

திடீர் திருப்பம் ! பாகிஸ்தான் மீது தான் என் முதல் காதல் ,வெளியேற மாட்டேன்முஷரப் அறிவிப்பு --!-----ஏ.சுகுமாரன்
பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்தவர் முஷரப். அவர் பதவி விலகவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டுவருவோம் என்றும் ஆளும் கூட்டணி அறிவித்தது. கண்டன தீர்மானத்தை தவிர்க்கும் வகையில் முஷரப் பதவி விலகினார். அவர் அமெரிக்கா செல்லப்போகிறார் என்றும், இங்கிலாந்தில் வசிக்கப்போகிறார் என்றும் வதந்திகள் உலா வந்தனர். இந்த வதந்திகளை முஷரப் மறுத்தார்.பாகிஸ்தான் மீது தான் என் முதல் காதல் என்றும், அதை விட்டு வெளியேற மாட்டேன் என்றும் முஷரப் அறிவித்து இருக்கிறார்.
இந்தி சினிமா பாடகர் முகமது ரபியின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பாடிய பாடல்களில் ஒன்று, ஓ பறவையே வா, பறந்து செல்வோம் (சல் உர் ஜா ரே பஞ்சி) என்பது ஆகும். நான் பறவை அல்ல. பறந்து செல்வதற்கு. நான் பாகிஸ்தான் நாட்டையும், மக்களையும் நான் மிக அதிகமான அளவில் நேசிக்கிறேன். எனவே நான் பாகிஸ்தானை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறியதாக ஒரு சேனல் பேட்டியில் தெரிவித்து உள்ளது.

No comments: