காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்துக்கு வாய்ப்பு ! ?: தங்கபாலு நம்பிக்கை !! ஏ.சுகுமாரன்
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசியபோது காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட மதச் சார்பற்ற கட்சிகள் சேரும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் அமைதியும், வளர்ச்சியும் நிலைக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். தமிழகத்துக்கும் இது பொருந்தும். தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வலுப்பெறும். பாமக உள்ளிட்ட கட்சிகளிடையே தற்போதுள்ள கருத்துவேறுபாடுகள் விரைவில் நீங்கிவிடும். தேர்தல் நேரத்தில் தேமுதிக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இணைய வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், காமராஜரின் திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இடம் பெயர்ந்த இடதுசாரிகள்: மக்களைக் கரைசேர்க்கும் கப்பலாக காங்கிரஸ் உள்ளது. ஆனால், காங்கிரûஸ மூழ்கும் கப்பலாக தவறாக நினைத்த இடதுசாரிகள் கடலில் குதித்து விட்டனர். அவர்கள் மூழ்கிக் கொண்டிருப்பது அவர்களுக்கே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியை தோல்வியுறச் செய்வதற்காகவே பாஜகவும், இடதுசாரிகளும் இணைந்து செயல்படுகின்றனர். எனினும், மதச்சார்பற்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆதரிக்கின்றன. இடதுசாரிகள் தற்போது இடம் பெயர்ந்து சென்று விட்டனர். மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் கருதியே இடதுசாரிகளின் செயல்பாடு உள்ளது. இது வெறும் பாவனையே. 3-வது அணி கற்பனையே!: இடதுசாரிகள் உள்ளிட்ட 3-வது அணி என்பது வெறும் கற்பனையே. எப்போதுமே அந்த அணி சாதித்தது எதுவும் இல்லை. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும். என்றார் தங்கபாலு
உஷார் ! செப்.15 முதல் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் கிடையாது ! நேரம் காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே - முகவர்கள் சங்கம் முடிவு: ஏ.சுகுமாரன்
சேலத்தில் திங்கள்கிழமை நடந்த தமிழ்நாடு பெட்ரோல் முகவர் சங்க மகாசபைக் கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் செயல்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக சென்னை போன்ற நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் டீசலை கொள்முதல் செய்து வருகின்றன. தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ரிலையன்ஸ், ஷெல், எஸ்ஸôர் போன்ற நிறுவனங்கள் தங்களது பெட்ரோல் விநியோகத்தை நிறுத்தி விட்டன. இதன் காரணமாகவும் அதன் வாடிக்கையாளர்கள் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த பெட்ரோல் நிலையத்துக்கு வரத்தொடங்கியதால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் நிறுவனங்கள் கடந்தாண்டு வழங்கிய அதே அளவையே நடப்பாண்டும் வழங்கி வருகின்றன. நுகர்வுக்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசலை அதிகரித்து வழங்க மறுத்து வறுகின்றன. இதன் காரணமாக பெட்ரோல் நிலைய முகவர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் விதத்தில் கேரளத்தில் உள்ளதுபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதுமுள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக வார நாள்களில் காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும். எண்ணெய் நிறுவனங்கள் போதிய அளவு டீசல், பெட்ரோல் ஆகியவற்றை வழங்காததால் தவிர்க்க முடியாத சூழலில் இம்முடிவை எடுத்துள்ளோம். என்றார்.
மறைமுகமாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த திட்டம் ! ஜெயலலிதா தகவல் ஏ.சுகுமாரன்
.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை மத்திய அரசு மறைமுகமாக உயர்த்துவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார் மேலும் கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு மீண்டும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டீசலுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக விவசாய உற்பத்தி, தொழில் வளம் என அனைத்து வளங்களும் குன்றிப் போயுள்ளன. மீனவர்கள் தங்கள் படகுகளில் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து, எண்ணை நிறுவனங்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவிதமான பயனும் இல்லை.எண்ணை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தலைமைச் செயலாளர் "டீசல் தட்டுப்பாட்டிற்குக் காரணம் மின் பற்றாக்குறையே'' என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மின்சாரப் பற்றாக்குறை காரணமாக, தகவல் தொழில்நுட்பம் உட்பட, அனைத்துத் துறைகளைச் சார்ந்த நிறுவனங்களும் 24 மணி நேரமும் இயங்க டீசல் தேவைப்படுகிறது என்றும், இதன் விளைவாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் தலைமைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.சாதாரண டீசலுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கினால், பிரீமியம் டீசலை அதிகம் விற்கலாம் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் புகார் கூறுகின்றனர். கச்சா எண்ணையின் விலை ஒரு பேரலுக்கு 35 டாலர் அளவுக்குக் குறைந்திருக்கும் இந்த வேளையில், இதுபோன்ற செயலில் மத்திய அரசு ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற முயற்சிகளில் எண்ணை நிறுவனங்கள் ஈடுபட்டால், இது மேலும் விலைவாசி உயர வழிவகுக்கும்.என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஒரிசாவில் பயங்கரம ! 2 பேர் எரித்துக் கொலை; பாதிரியாருக்கு பலத்த தீக்காயம்! ஏ.சுகுமாரன்
.ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் ஜலஸ்பேட்டாவில் உள்ள ஆசிரமத்துக்குள் கடந்த சனிக்கிழமை இரவு, ஆயுதம் தாங்கிய மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இக்கொலையை கண்டித்து, விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், பதட்டம் மிகுந்த கந்தமால் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி கொலையை கண்டித்து, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நேற்று 12 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு பா.ஜனதாவும் ஆதரவு தெரிவித்தது. இதையொட்டி, ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பர்கார் மாவட்டத்தில் புட்பாலி என்ற இடத்தில் கிறிஸ்தவ அமைப்பு நடத்தி வரும் அனாதை ஆசிரமத்துக்கு ஒரு மர்ம கும்பல் தீவைத்தது.
இதில் அங்கிருந்த ஒரு பெண், தீயில் கருகி பலியானார். ஒரு கிறிஸ்தவ பாதிரியார் பலத்த தீக்காயம் அடைந்தார். அவர் பர்காரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த 20 குழந்தைகள் உயிர் தப்பின. பலியான பெண்ணைப் பற்றிய அடையாளம் கண்டறியப்படவில்லை. அனாதை ஆசிரமத்தில் இருந்த மரச்சாமான்களையும் கும்பல் அடித்து நொறுக்கியது.
இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதியின் உடல், ஜலஸ்பேட்டா ஆசிரம பள்ளியில் இருந்து சாகபடாவில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. முன்னதாக, அவரது உடலுடன் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் நடந்து சென்றனர். அப்போது அவர்களில் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
வழியில் தென்பட்ட தேவாலயங்களுக்கு தீவைத்தனர். கிறிஸ்தவ பள்ளிகளையும், வீடுகளையும், கடைகளையும், போலீஸ் சோதனை சாவடிகளையும் அடித்து நொறுக்கினர். 12 தேவாலயங்களும், 40 வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறையை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.பந்த்தையொட்டி, தலைநகர் புவனேஸ்வரத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து, போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. .. கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
ரிலையன்ஸ் புதிய பிரிபெய்டு ஜாது 135 பேக் திட்டம் ! சிறிய நிறுவன உபயோகிப்பாளருக்கு லாபம் !
ஏ.சுகுமாரன்
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், சிறு மற்றும் நடுத்தர நிறுவன செல்போன் வாடிக்கையாளர்களுக்காக பிசினஸ் ஜாது 135 பேக் என்ற பிரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனத்தின் தமிழகப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி அஜய் அவஸ்தி நிருபர்களிடம் கூறியதாவது:
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக பிசினஸ் ஜாது 135 பேக் என்ற பிரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம்வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் இணைந்து கொள்ள விரும்புவோர் மாதாமாதம் ரூ.135க்கு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். 5 பேர் கொண்ட ஒரு நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் இதில் இணைந்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்ளும் அழைப்புகள் அனைத்தும் இலவசம். இதர செல்போன்கள் மற்றும் லேண்ட் லைன் போன்களுக்கு அழைப்பு விடுத்தால் ஒரு நிமிடத்திற்கு 49 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும்.
பிசினஸ் ஜாது 135 திட்ட வாடிக்கையாளர்கள் இதர ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு விடுக்கும் அழைப்புளும் இலவசம்தான். அதேபோல டாப் அப் ரீசார்ஜ் செய்யும் தொகை முழுவதையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பேசலாம். இத்திட்டம் சென்னை உட்பட தமிழக வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
இத்திட்ட வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் கட்டணத்தில் 35 சதவீதம்வரை சேமிக்க முடியும்.
தற்போது தமிழகத்தில் 40 லட்சத்து 50 ஆயிரம் வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் பெற்றுள்ளது. இதில் 92 சதவீதம்பேர் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள். தமிழகத்தில் 90 சதவீத கிராமங்களில் ரிலையன்ஸ் சேவை வழங்கப்படுகிறது.
தற்போது மாநிலம் முழுவதிலும் 1400 இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
Tuesday, August 26, 2008
தமிழ் செய்தி ஆக் 26
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment