Monday, August 18, 2008

செய்திகள் ஆக்ஸ் 18 மணி 8.05 AM

கள்ள நோட்டுகளை தடுக்க செயற்கை பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகள் ஏ.சுகுமாரன்
ஆஸ்திரேலிய அரசின் தொழில்நுட்ப உதவியுடன் பாலிமரால் ஆன ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. கள்ள ரூபாய் நோட்டுப் புழக்கத்தைத் தடுக்க முடியும் என்பதால் இதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இது காகித நோட்டுகளை விட நான்கு மடங்கு அதிக காலம் நீடித்திருக்கக் கூடியது.காகித ரூபாய் நோட்டுகளை மறு சுழற்சி செய்வதைப் போல பாலிமர் நோட்டுகளை மறு சுழற்சி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லை அதே நேரத்தில் காகித நோட்டுகளை விட நான்கு மடங்கு அதிக காலம் நீடித்திருக்கக் கூடியது.
ஏர் இந்தியா சாதனை -ரூ. 2,100 கோடி நஷ்டம் ஏ.சுகுமாரன்

ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் ரூ. 2,100 கோடியாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலையேற்றம் காரணமாக இது மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதுஅதிகரித்து வரும் நஷ்டத்தைக் கட்டுப்படுத்த ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. செலவுக் குறைப்பு ஆலோசனைகளை ஏர் இந்தியாவின் நிதித்துறை பரிந்துரைத்துள்ளது. அதைத் தீவிரமாக அமல்படுத்த ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்துள்ளதுமுதல் கட்டமாக ஏர் இந்தியா அதிகாரிகள் அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல வேண்டுமெனில் அதற்கு ஏர் இந்தியா தலைவரின் அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. விமான பைலட்டுகள் மற்றும்பணிப்பெண்கள் தவிர மற்றவர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது. அவ்விதம் செல்லும் விமான ஊழியர்கள், ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான அறைகள் அல்லது குறைந்த வாடகை ஹோட்டல்களில் மட்டுமே தங்கவேண்டும். இவாறு பலசிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
சனிக்கிழமையும் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க கோரிக்கை ஏ.சுகுமாரன்
புதுச்சேரி ஆசிரியர் சங்கம் தலைவர் வாசுதேவன்,
பொதுச்செயலர் நா. சந்திரசேகரன் ஆகியோர்
வெளியிட்ட அறிக்கையில் ஷிப்ட் முறையில் இயங்கும்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமையும் சிற்றுண்டி
வழங்க வேண்டும் என்று புதுச்சேரி ஆசிரியர் சங்கம்
வலியுறுத்தியுள்ளது. தவிர்க்க இயலாத காரணத்தால் சில அரசுப்
பள்ளிகள் ஷிப்ட் முறையில் இயங்கி வருகின்றன.
அதனால் அப் பள்ளி மாணவர்கள் சனிக்கிழமையும்
பள்ளிக்கு வருகின்றனர். மற்ற நாள்களில் பள்ளியில் காலைச் சிற்றுண்டி
வழங்கப்படுவதால் வீட்டில் சாப்பிடாமலேயே வரும்
மாணவர்கள், சனிக்கிழமையும் அதுபோலவே வந்து வாடி
வதங்குகின்றனர். மேலும் சனிக்கிழமைகளில் மாணவர் வருகை குறைந்து வருகிறது. இதைப் போக்க ஷிப்ட் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை
காலை, மாலை சிற்றுண்டி மற்றும் பால் வழங்கும்
வகையில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கல்வியமைச்சர், இயக்குநரிடம் மனு
அளித்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

முரசொலி மாறன் 74-வது பிறந்த நாள்-- மலரஞ்சலி ஏ.சுகுமாரன்
மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 74வது
பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர்
கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி
செலுத்தினர்.சென்னை கோடம்பாக்கத்தில்
முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலிமாறன் முழு
உருவச்சிலை வண்ணமலர்களால்
அலங்கரிக்கப்பட்டு, ஆளுயர மாலையும் அணிவிக்கப்பட்டிருந்தது.முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று காலை 9.30 மணிக்கு
முரசொலி அலுவலகம் வந்தார். அங்குள்ள முரசொலி மாறன் சிலைக்கு மலர்தூவி
வணங்கினார். அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு
வீராசாமி, பரிதி இளம்வழுதி, கீதா ஜீவன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு,
ராஜா, ராதிகா செல்வி உள்ளிட்டோரும், திமுக தலைவர்களும் மாறனுக்கு
அஞ்சலி செலுத்தினர்.விடுதலைச் சிறுத்தைகள்
கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மாறனுக்கு
அஞ்சலி செலுத்தினர்.உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சியில்
முரசொலி மாறன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
கன்னியாகுமரியில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், மாறன் படத்திற்கு அஞ்சலி
செலுத்தினார். சன் பௌண்டேசின் ஒரு கோடி ரூபாய்க்கு நல உதவி
திட்டங்களை அறிவித்து
உள்ளது
அரசியலில் 3-வது அணிக்கு இடம் இல்லை ! காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டி -ஏ.சுகுமாரன்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு கட்சியின் செயல்வீரர்கள்
கூட்டத்தில் கலந்து கொள்ள விருதுநகர் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி
அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பெருந்தலைவர் காமராஜரின் வாரிசுகள் யாரும் சிரமப்படாமல் காங்கிரஸ்
கட்சி பார்த்துக்கொள்ளும். தமிழகத்தில் எந்த காங்கிரஸ்காரருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் காங்கிரஸ் கட்சி அவர்களுக்கு தேவையான உதவிகளை
செய்ய தயாராக உள்ளது.அவரது தங்கை மகள் கமலாதேவி அம்மையாரின்
மருத்துவ செலவுக்காக ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று அவரிடம் நேரடியாக ரூ.3 ஆயிரம்
உதவித்தொகை வழங்கப்படும்.
இன்னும் 10 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில்
பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் பிரதமராகி ஆட்சி
அமைக்க, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உழைக்க வேண்டும் என்பது முதல் கடமை.என்றார்


சட்டம்- ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் --புதுச்சேரி கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜார் நடத்தினார்.ஏ.சுகுமாரன்
புதுச்சேரி மாநில கவர்னராக கோவிந்த்சிங் குர்ஜார் பொறுப்பேற்ற பின்பு, புதுச்சேரி மாநில சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜார் தலைமையில் நடந்தது இந்த கூட்டத்திற்கு கவர்னர் கோவிந்த்சிங் குர்ஜார் தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் (பொறுப்பு) நைனீ ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் டி.ஜி.பி. கான், ஐ.ஜி. வாசுதேவராவ், டி.ஐ.ஜி. ஏ.கே.சிங், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் அருகே சாலைமறியல்-- துப்பாக்கி சூடு: ஏ.சுகுமாரன்

திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தியபோது போலீசார் தடியடியும் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் ரெட்டணை கிராம பஞ்சாயத்து தலைவர் கலைச்செல்வன், அவருடைய தம்பி தமிழ்ச்செல்வன் உள்பட பலர் காயம் அடைந்தனர்.போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியபோது துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு மூர்த்தி (15) என்பவரின் தோளில் பாய்ந்தது. இதில் காயமடைந்த மூர்த்திக்கு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மூர்த்தியை திண்டிவனம் எம்.பி. தன்ராஜ் பார்த்து நலம் விசாரித்தார். பின் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மூர்த்திக்கு தமிழக அரசு ரூ.1லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்கவேண்டும்.என்று தன்ராஜ் எம்.பி. கூறினார்.

No comments: