Monday, August 11, 2008

செய்திகள் ஆக்ஸ் 11 மணி 7.40 AM

அந்தமானில் நிலநடுக்கம் : சென்னையிலும் 2 முறை நிலநடுக்கம் ! மக்கள் பீதி ! -- ஏ.சுகுமாரன்

அந்தமான் தீவுகளில் பிற்பகல் 2 மணி 57 நிமிடம் 58 விநாடிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6 ஆகப் பதிவானது. அந்தமானை மிரட்டும் பூகம்பம்: இந்திய துணைக் கண்டத்தில் அந்தமான் தீவுக் கூட்டம் அமைந்துள்ள நிலத்தட்டு அடிக்கடி நகருவதால் நிலநடுக்கம் ஏற்படுகிறது. அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் விளைவாக , அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு பிற்பகல் 1.50 மணிக்கும், 3 மணிக்கும் உணரப்பட்டது. இதனால், மக்கள் பீதியடைந்து வீடுகளிலிருந்து வெளியேறி வீதிக்கு வந்தனர்.
எனினும், சுனாமி தாக்கும் அபாயம் ஏதும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் பரிதாபம் லாரி ஆற்றில் மூழ்கி 42 பேர் சாவு ! ஆந்திரா வெள்ளத்தில் தத்தளிப்பு ! 8 ஆண்டுகளில் இல்லாத மழை ! -- ஏ.சுகுமாரன்
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக பெய்து வரும் பலத்த மழையால் ஆந்திர மாநிலம் தத்தளிக்கிறது. பல மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆற்று வெள்ளத்தில் லாரி அடித்துச் செல்லப்பட்டதில் 42 பேர், நீரில் மூழ்கி பலியாயினர். ஆந்திராவ¤ல் மழை, வெள்ளத்துக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரா & ஒரிசா மாநில எல்லையை ஒட்டி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால், ஆந்திராவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடை விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் இதுபோன்ற பலத்த மழை பெய்தது இல்லை என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கன மழை காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 2 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதில் 90 லட்சம் ஏக்கரில் பயிர்கள் முற்றிலுமாக நாசமடைந்துவிட்டன. பல முக்கிய சாலைகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. தண்டவாளங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள் ளன. இதனால், பஸ், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் நகரில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குண்டூர், கோதாவரி, ரங்கா ரெட்டி, மேடக் மாவட்டங்களில் 100க்கும் அதிகமான வீடுகள் இடிந்தன. இடிபாடுகள் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 58 பேர் பலியாகியுள்ளனர். ஐதராபாத்தில் மட்டும் 11 பேர் பலியாகியுள்ளனர். குண்டூர் மாவட்டம் நருக்கல்லடு என்ற இடத்தில் நேற்று மதியம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. 10 பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் லாரியில் இருந்தனர். மட்டுரு ஆற்றில் திடீரென அதிகரித்த வெள்ளத்தில் லாரி அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்தவர்கள் நீரில் மூழ்கினர். 42 பேர் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள், நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து, மழை பலி 100 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
. தமிழக அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை: -- கன்னட செம்மொழி வழக்கு பற்றி விளக்கம் -- ஏ.சுகுமாரன்
கன்னடத்தை செம்மொழியாக அறிவிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வக்கீல் ஒருவர் இதைத் தாக்கல் செய்துள்ளார்.
இது கர்நாடகாவில் பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளது. கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் நேற்று கர்நாடகத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். தமிழக ரயில்கள் மறிக்கப்பட்டன. தமிழக லாரிகள் தாக்கப்பட்டனசென்னை: கன்னடத்தை செம்மொழியாக அறிவிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொது நலன் வழக்கில் தமிழக அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தமிழக அரசு விளக்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தருவது தொடர்பாக பரிசீலிக்க குழு அமைக்கும் மத்திய அரசின் முடிவை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் பொது நலன் வழக்கை தாக்க்ல செய்துள்ளார். இதற்கும் தமிழக அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்ைல.அந்த வழக்கறிஞருடனோ அல்லது அந்த வழக்குடனோ தமிழக அரசுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை.உண்மை இப்படி இருக்க, கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தருவதற்கு தமிழக அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியிருப்பது செய்தி வருத்தத்திற்குரியது, கண்டித்தக்கத்து.ஒரு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தருவது குறித்த முடிவை மத்திய அரசுதான் எடுக்கும். நிபுணர் குழுவின் அறிக்கைப்படி இந்த முடிவை மத்திய அரசு எடுக்கும். இதில் தமிழக அரசுக்கு எந்த வேலையும் இல்லை.இந்த விவகாரத்தில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே மோதலை உருவாக்க வேண்டாம் என சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
கள்ளநோட்டு புழக்கம் நாடு முழுவதும் அதிகரிப்பு ! உள்துறை அமைச்சகம் கவலை! -- ஏ.சுகுமாரன்

உத்தரப் பிரதேச மாநிலம் துமாரியாகாஞ்ச் ஸ்டேட் வங்கி கிளையின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து ரூ.1.40 கோடிக்கு கள்ளநோட்டுகள் இருந்தது கடந்த சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. சமீபகாலத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான கள்ளநோட்டுகள் இவை. நாடு முழுவதும் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதால், மத்திய உள்துறை அமைச்சகம் கவலை அடைந்துள்ளதுதீவிரவாத அமைப்புகள், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுக்கொண்டிருக்கலாம் என்ற செய்தியால் உள்துறை அமைச்சகம் கவலை அடைந்துள்ளது. கள்ளநோட்டுகளை தடுக்க உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் மதுக்கர் குப்தா சமீபத்தில் உயரதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். அப்போது, வெளிநாடுகளில் இருந்து கள்ளநோட்டுகள் வருவதை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என வலியுறுத்தப்பட்டது. நிதியமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைப்புகள், ரிசர்வ் வங்கி ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து இதில் செயல்பட்டால் மட்டுமே கள்ளநோட்டுகளை தடுக்க முடியும் என்று வலியுறுத்தப்பட்டது.இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அக்டோபரில் விழுப்புரம்-கடலூர்இடையே ரயில் ஓடத்துவங்கும் ! அமைச்சர் வேலு அறிவிப்பு ! -- ஏ.சுகுமாரன்

விழுப்புரம், ஆக. 11: விழுப்புரம்-கடலூர் இடையே அக் டோபர் மாதம் இறுதியில் ரயில் போக்குவரத்து தொடங்கும் மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு கூறினார். விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே சேர்ந்தனூர் என்ற இடத்தில் தென் பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டும் ரயில்வே மேம்பால பணியை மத்திய இணை அமைச்சர் வேலு நேற்று காலை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. தூரத்திற்கு ரூ.270 கோடி மதிப்பில் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் 16 கிராசிங் ஸ்டேஷன்கள் உள்ளன. 5 ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும். இந்த பாலத்தில் (சேர்ந்தனூர் ரயில்வே மேம்பாலம்) 2 தூண்கள் மட்டும் கட்ட வேண்டி உள்ளது. செப்டம்பர் மாதம் இறுதியில் பணிகள் முடிந்துவிடும். அதே நேரத்தில் சேர்ந்தனூர் ரயில் நிலைய பணிகளும் முடியும். இங்கு கரும்பு வண்டிகள் போக வேண்டும் என்ற கிராம மக்களின் கோரிக் கையை ஏற்று வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. கெடிலம் ஆற்றில் பணிகள் விரைவில் முடிந்துவிடும். அக்டோ பர் மாதம் இறுதியில் விழுப்புரம்-கடலூர் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கும். மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி, கொள்ளிடம் வரை பணிகள் முடிந்து விட்டது. பிரச்னைக்குரிய இடம் கொள் ளிடம். அங்கு பாதி வேலை முடிந்துள்ளது. பாறைகள் அதிகம் உள்ளதால் வட இந்தியாவில் பயன்படுத்தும் இயந்திரங்களை கொண்டு பணிகள் நடக்கிறது. இந்த திட்டம் தொடங்கியபோது ரூ.26 ஆயிரத்திற்கு விற்ற ஒரு டன் கம்பி விலை தற்போது ரூ.54 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சிமெண்ட் விலையும் ரூ.155ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள் ளது. வெளியில் கம்பிகள் வாங்கி னால் தரம் இருக்காது என்பதால் சேலத்தில் கடந்த 3 மாதங்களாக ரயில்வே பணிக்காக கம்பிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே டிசம்பர் இறுதியில் பணிகள் முடிந்து அடுத்தாண்டு ஜனவரி மாதம் ரயில் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது. இவ்வாறு மத்திய இணை அமைச் சர் வேலு கூறினார்.

No comments: