Friday, August 08, 2008

செய்திகள் ஆக்ஸ் 8 மணி 7.30AM

அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா நீக்கம்---கருணாநிதி திடீர் நடவடிக்கை -ஏ.சுகுமாரன்
முன்னாள் தி.மு.க. அமைச்சர் என்.கே.கே.பெரியசாமியின் மகனான என்.கே.கே.பி. ராஜா. இவர் தமிழக அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஈரோடு , பெருந்துறையை சேர்ந்த பழனிச்சாமி, அவருடைய மனைவி மலர்விழி, மகன் சிவபாலன் ஆகியோரை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் ஆட்கள் கடத்திச் சென்று மறைத்து வைத்து இருப்பதாக அவர்களுடைய உறவினர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே பழனிச்சாமியும், அவர் மனைவியும் கடந்த வாரம் ஐகோர்ட்டில் ஆஜராகி அமைச்சரின் ஆட்களால் தாங்கள் கடத்தப்பட்டதாகவும், தங்களுடைய பூர்வீக நிலத்தை கொடுத்துவிடும்படி அடித்து உதைக்கப்பட்டதாகவும் தங்கள் மகன் சிவபாலன் இன்னும் அமைச்சரின் பிடியில் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.இதையடுத்து அந்த தம்பதிக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த கடத்தல் புகாரை அமைச்சர் ராஜா திட்டவட்டமாக மறுத்தார்.கடந்த 15 நாட்களாக நீடித்து வந்த இந்த பிரச்சினையில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது.அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா முதல்-அமைச்சர் கருணாநிதியின் உத்தரவுப்படி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.அவரது பதவிநீக்கம் தொடர்பாக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் செயலாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது அவர் வகித்து வந்த கைத்தறி மற்றும் ஜவுளித்துறையின் பொறுப்பை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூடுதலாக கவனிப்பார்.


பீஜிங்கில் இன்று ஒலிம்பிக்--உலக விளையாட்டு திருவிழா ஏ.சுகுமாரன்

ஒலிம்பிக் போட்டி சீனாவில் இன்று பிரம்மாண்டமாக தொடங்குகிறது.ஒலிம்பிக் போட்டியால் பீஜிங் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.உலகின் பழமை வாய்ந்த, பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டி ஆகும். இந்த மெகா போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 29-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி சீனத் தலைநகர் பீஜிங்கில் இன்று தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. 204 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டைக்காக பீஜிங்கில்குவிந்துள்ளனர் .
2 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்டேடியம் 91 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது. அவர்களுடன் நடன கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என்று மேலும் 60 ஆயிரம் பேர் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.மூன்றரை மணி தொடக்க விழா நிகழ்ச்சிகள் அரங்கேறுகிறது. சீனாவின் வரலாற்றை எடுத்துரைக்கும் 50 நிமிடம் நிகழ்ச்சி இதில் சிறப்பம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ஏராளமான உலக தலைவர்கள் சீனாவுக்கு வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்ஸ் அதிபர் நிகோலஸ், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட 100 நாட்டு தலைவர்கள் தொடக்க விழாவை நேரில் கண்டு ரசிக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றிருக்கிறார்கள்.
ஒலிம்பிக் கிராமத்தில் நேற்று இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஒலிம்பிக் போட்டியையொட்டி ஒலிம்பிக் ஜோதி 6 கண்டங்களை சேர்ந்த உலக நாடுகள் முழுவதும் பவனி வந்தது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் எடுத்து செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபம் 2 தினங்களுக்கு முன்பு பீஜிங் வந்தது. நேற்று உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவருக்கு எடுத்து செல்லப்பட்டது.இன்று அது தொடக்க விழா நடைபெறும் பறவை கூடு மைதானத்திற்கு கொண்டு வரப்படும். இங்கு ஜோதி ஏற்றப்பட்டதும், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஜேக்ïஸ் ரோச் போட்டியை முறைப்படி தொடங்கி வைப்பார்.
எம்.பி.பி.எஸ். சேர்த்த தாழ்த்த பட்ட மாணவர்களுக்கு இன்றே பாட்கோ கடன்--- கந்தசாமி தகவல் ---ஏ.சுகுமாரன்

புதுவையில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., என்ஜினீயரிங் உள்பட பல்வேறு தொழில்நுட்ப கல்லூரிகளில் சென்டாக் மூலம் தேர்வாகி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கட்டணத்தை அரசே வழங்கி வருகிறது..சென்டாக் மூலம் தேர்வாகி தொழில்நுட்ப கல்லூரிகளில் படிக்கும் அட்டவணை இன மாணவர்களுக்கான கட்டணம் ஆதிதிராவிட நலத்துறை மூலம் வழங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்திருந்தார்.தற்போது எம்.பி.பி.எஸ். படிப்பினை தேர்வு செய்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு இன்று கடைசி நாள் ஆகும். ஆனால் சென்டாக் மூலம் சேரும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை செலுத்தவேண்டும் என்றும் மேலும் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் அதை அரசு கடனாக வழங்கவேண்டும் என்று அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் கந்தசாமியிடம் தாழ்த்த பட்ட இன மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்கும் தாழ்த்த பட்ட இன மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை தவிர மற்ற கட்டணங்களுக்கான நிதியை பாட்கோ மூலம் கடனாக வழங்க அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்
முதல்வர் ரங்கசாமி டெல்லி பயணம் :புதுவையில் அரசியல் பரபரப்பு ஏ.சுகுமாரன்
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக 5 அமைச்சர்கள்- வைத்திலிங்கம், வல்சராஜ், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்வருக்கு எதிராக சோனியாகாந்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
. முதல்வர் என். ரங்கசாமி 4-ம் தேதி 59-வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அதை முடித்து விட்டு டெல்லிக்கு வருவதாகக் கூறியிருந்தார். மேலும் 6-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதையும் முடித்து விட்டு டெல்லி வருவதாகக் கூறியிருந்தார். இதற்கிடையில் அமைச்சரவைக் கூட்டத்தைத் தள்ளிவைக்குமாறு மற்ற 5 அமைச்சர்களும் கடிதம் கொடுத்திருந்தனர். இதையடுத்து இக் கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி தள்ளிவைத்தார். இப்போது டெல்லிக்கு ரங்கசாமி சென்றுள்ளார். அதனால் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலும் ஆதரவு வாபஸ் ! இடதுசாரிகள் முடிவு-- அரசியலில் அணி மாற்றம் ஏ.சுகுமாரன்

காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான அணியில் இருந்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகுகின்றன என்று தெரிகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுச் செயலாளர் என்.வரதராஜன் புதுக்கோட்டையில் பேசிய போது காங்கிரஸýடனான உறவைத் தொடர்ந்தால், திமுக அரசுக்கான ஆதரவை அடுத்த மாதம் வாபஸ் பெறுவோம்'' என்று தெரிவித்தார் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றாலும், தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. திமுகவுக்கு சட்டப் பேரவையில் 96 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏ.க்களும், விடுதலைச் சிறுத்தைகளின் 2 எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இடதுசாரிக் கட்சிகளைத் தவிர்த்து, 133 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு திமுக அரசுக்கு உள்ளது. இதனால், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

No comments: