Tuesday, August 19, 2008

செய்திகள் ஆக்ஸ் 19 மணி 7.50 AM

அசோசேம்' தரும் அதிர்ச்சி தகவல்கள் : ஆண்டுக்கு ரூ. 50,000 கோடி நஷ்டம் -- ஏ.சுகுமாரன்
தொழில்துறை சம்மேளனங்களின் கூட்டமைப்பான "அசோசேம்' தொழில்துறை தலைமை நிர்வாகிகள் 400 பேரிடம் நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்துள்ளதுஇந்திய உணவுக் கார்ப்பரேஷன் (எஃப்சிஐ) கிடங்குகளில் 6 கோடி டன் உணவுப் பொருள் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் முடங்கிக் கிடக்கிறது. இதைப் பராமரிக்க ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் கோடியைஅரசுசெலவிடுவதாகவும் "அசோசேம்' குறிப்பிட்டுள்ளதுகாய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. ஆனாலும் 40 சதவீத உற்பத்தி அழுகி வீணாவதாக "அசோசேம்' தலைவர் சஜன் ஜின்டால் தெரிவித்துள்ளார்மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் கொண்டு வரும் திட்டப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் கால தாமதம்வும் , கண்காணிக்கும் அமைப்பு இல்லாதது காரணமாகவும் ரூ. 40 ஆயிரம் கோடி முதல் 50 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. .

புதுவையில் தனியார் பஸ்களில் மட்டும் கட்டணம் உயர்வு-----ஏ.சுகுமாரன்

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், கடலூர், திண்டிவனம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் தனியார் பஸ்களின் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. புதுச்சேரி அரசின் பர்மிட்டில் இந்த ஊர்களுக்குச் செல்லும் பஸ்களில் இக் கட்டண உயர்வை தனியார் பஸ் உரிமையாளர்கள் அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் அரசின் அனுமதியின்றி தனியார் பஸ் கட்டணம் திடீரென்று திங்கள்கிழமை முதல் உயர்த்தப்பட்டுள்ளது அதே சமயம் இந்த ஊர்களில் இருந்து தமிழக அரசின் பர்மிட்டில் புதுச்சேரிக்கு வரும் பஸ்களில் பழைய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் தனியார் பஸ்களில் கட்டணம் ரூ.11-லிருந்து ரூ.12-ஆக வசூலிக்கப்படுகிறது. புதுச்சேரியில் பஸ் கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். முதல்வர் ரங்கசாமி முதலியவர்களிடம் மனு அளித்தனர். ஒரு நாள் பஸ்ûஸ நிறுத்தி போராட்டமும் நடத்தினர். கட்டணஉயர்வு குறித்து புதுச்சேரி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பா.கண்ணன்கடந்த 6 ஆண்டுகளாக புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் டீசல் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இது தொடர்பாக அரசிடம் பலமுறை முறையிட்டுள்ளோம். எங்களால் மேற்கொண்டு தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த கட்டண உயர்வை அமல் செய்துள்ளோம். குறைந்தபட்சம் 50 பைசா உயர்வும், அதிகபட்சம் ரூ.1 என்ற அளவில்தான் உயர்த்தியுள்ளோம். இந்த கட்டண உயர்வும் போதாது. மேலும் அரசு கூடுதலாக ரூ.1 உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

நாளை நாடு முழுவதும் பஸ், லாரி, ஆட்டோக்கள் ஓடாது ! தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு ! --ஏ.சுகுமாரன்

விலை உயர்வை கட்டுப்படுத்துதல், பொதுவிநியோக முறையை விரிவுபடுத்துதல், குறைந்தபட்ச கூலி, வேலைநேரம், சமூகப் பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு போன்ற தொழிலாளர் நல சட்டங்களை கடுமையாக அமல்படுத்துதல், 6-வது சம்பள கமிஷனில் உள்ள பாதகமான அம்சங்களை நீக்குதல், வராக்கடனை வசூலித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (20-ந் தேதி) பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது தமிழ்நாட்டில் பஸ், லாரி, ஆட்டோக்கள் ஓடாது என்று சி.ஐ.டி.ï., ஏ.ஐ.டி.ï.சி. தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 7 கோடி பேர் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் 70 லட்சம் பேர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். வேலைநிறுத்தம் காரணமாக பஸ், லாரி, ஆட்டோக்கள் ஓடாது. சென்னையில் உள்ள 80 ஆயிரம் ஆட்டோக்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது.சென்னையில் திருவொற்றிïர், மணலி, ஆவடி, அம்பத்தூர், குறளகம், பனகல் மாளிகை ஆகிய 6 இடங்களில் சாலை மறியலும், ஆவடியில் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெறும். இதுபோல மாவட்டங்களிலும் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். இதற்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்.இவ்வாறு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன் ஆகியோர் கூறினர்.

திண்டிவனம் அருகே நடந்தபோலீஸ் தடியடி : கருணாநிதி நீதி விசாரணைக்கு உத்தரவு ! காயம் அடைந்த சிறுவனுக்கு நிதி உதவி ! ஏ.சுகுமாரன்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை என்ற கிராமத்தில் `தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்' கீழ் வேலை செய்த அனைவருக்கும் தலா ரூ.80 ஊதியம் வழங்கக்கோரி கடந்த 16-ந் தேதி மறியல் போராட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. அப்போது, போலீசார் தடியடி நடத்தினார்கள்.இதில், சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, உண்மை நிலையை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். அமைச்சர் பொன்முடி, மத்திய மந்திரி வேங்கடபதி மற்றும் மாவட்ட கலெக்டர் பழனிசாமி, போலீஸ் சூப்பிரண்டு அமல்ராஜ் ஆகியோர் ரெட்டணை கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, .அறிக்கை சமர்ப்பித்தனர்மேலும் திண்டிவனம் அருகே நடந்த போலீஸ் தடியடி குறித்து நீதி விசாரணை நடத்த முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். மேலும், காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டார்.

திடீர் பஸ் கட்டண உயர்வுக்கு கடும் நடவடிக்கை எடுக்க ஷாஜகான் உத்தரவு --ஏ.சுகுமாரன்

புதுச்சேரியில் உள்ள தனியார் பஸ்களில் கட்டணம் திடீர் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. இதில் கடலூருக்கு 50 பைசாவும், விழுப்புரத்திற்கு ரூ. 1 உயர்த்தப்பட்டு உள்ளது. "அரசு அனுமதி பெறாமல் பஸ் கட்டணத்தை உயர்த்த கூடாது. இதையும் மீறி பஸ் உரிமையாளர்கள் பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டு உள்ளேன். அவர்களும் தங்களது பணியில் இறங்கி விட்டனர்.இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் கூறினார்.

கம்ப்ïட்டரில் இருந்து செல்போனை தொடர்பு கொள்ள இன்டர்நெட் தொலைபேசிக்கு அனுமதி---ஏ.சுகுமாரன்

தற்போது இரண்டு கம்ப்ïட்டர்களுக்கு இடையே மட்டும் `வாய்ஸ் மெயில்' மூலமாக தொடர்பு கொள்ள முடியும். செல்போன் அல்லது சாதாரண தொலைபேசியில் இருந்து கம்ப்ïட்டரை தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் `டிராய்' அனுமதியை தொடர்ந்து இனிமேல் தனிப்பட்ட கம்ப்ïட்டரில் இருந்து சாதாரண தொலைபேசி மற்றும் செல்போன்களை தொடர்பு கொள்ளலாம்.இன்டர்நெட் தொலைபேசி வசதிக்கு `டிராய்' (தகவல் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) நேற்று அனுமதி அளித்தது. இதனால் எஸ்.டி.டி. பேசுவதற்கான கட்டணங்கள் பெரிய அளவில் குறையும்

நேபாள முதல் பிரதமராக பிரசாந்தா பதவி ஏற்றார் ! குடியரசு மலர்ந்தது ! ---ஏ.சுகுமாரன்

நேபாள குடியரசின் முதல் பிரதமராக பிரசாந்தா என்கிற புஷ்ப கமல் டஹல் நேற்று பதவி ஏற்றார். ஜனாதிபதி மாளிகையில் பதவி ஏற்பு விழா நடந்தது. அவருக்கு ஜனாதிபதி ராம் பரண் யாதவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில் வெளிநாட்டு தூதர்கள், கட்சித்தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்திய அரசியல் கட்சி தலைவர் சரத் யாதவ் இந்த விழாவில் கலந்து கொண்டார்.

வங்கிகள் சிறு தொழில் கடன்களை அள்ளி வழங்குகிறது ! இரு மாதத்தில் ரூ.60,000 கோடி --ஏ.சுகுமாரன்

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சிறு தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன் அளவு 52 சதவீதம் அதாவது ரூ.60,398 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. 2007ம் ஆண்டில் இதே காலத்தில் கடனின் அளவு 29.5 சதவீதம்தான் அதிகரித்தது. மே மாதம் 23ம தேதி நிலவரப்படி சிறு தொழில்களுக்கு வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள கடனின் மொத்த அளவு ரூ.1,76,282 கோடி ஆகும்.
நடப்பு ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங் சிறுதொழில்களுக்கு வழங்கப்படும் கடனின் அளவை 29 சதவீதம் உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ ஏற்கெனவே சென்ற ஆண்டைவிட 30 சதவீதம் கூடுதலாக சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடனவழங்கி இருப்பதாக அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் கூறினார். யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் சிறுதொழில் கடன் வளர்ச்சி இலக்கு 35 சதவீதம் ஆகும். ஆனால் 2008 ஜூன் மாதத்திற்குள் சிறு தொழில் கடன் 41 சதவீதம் அதிகரித்துள்ளது. இக்காலத்தில் வழங்கப்பட்ட கடன் தொகை அளவு ரூ 12,630 கோடி. ஆனால் 2007 ஜூன் மாத இறுதிவரை வழங்கப்பட்ட கடன் அளவு ரூ 8,962 கோடிதான். பரோடா வங்கி நடப்பு ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.13,000 கோடி கடன் வழங்கி உள்ளது. இது சென்ற ஆண்டைவிட 18 சதவீதம் கூடுதலாகும். ஆனால் தமிழ் நாட்டில் எத்தனை பெயர் பயன் பெற்றனர் என்ற விபரம் தெரியவில்லை

No comments: